Breaking News

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்புக்கு திடீர் விஜயம் !

 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வருகிறார்.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில் இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழைக்கும் வரவேற்பு இதழுடன் ஜெய்ஷங்கர் கொழும்பு வருகிறார்.

இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கும் அவர் இந்த அழைப்பிதழை கையளிப்பார் .பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜெய்ஷங்கர் சந்திப்பாரென தெரிகிறது.

இதேவேளை அவுஸ்திரேலிய பிரதமரும் கோட்டபாயவுக்கு தொலைபேசி மூலம் இன்று வாழ்த்தை தெரிவித்துள்ளார்.