Breaking News

இந்திய பெட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று

இந்திய பெட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

தாய்லாந்து ஓபன் பெட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட இந்திய வீர வீராங்கனைகள் பேங்கொக் சென்றுள்ளனர்.

சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின்படி போட்டிக்கு முன்பாக சாய்னாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், இந்திய பெட்மிண்டன் வீரர் பிரனாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.