இலங்கை

இந்திய பாதுகாப்புச் செயலர் மித்ரா கொழும்பு வருகிறார் – முக்கிய பேச்சுக்களை நடத்துவார்.

இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சே மித்ரா இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு வருகிறார்.

கொழும்பில் அவர் ஜனாதிபதி – பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றுக்கொண்டு அரச செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் இந்திய பாதுகாப்புச் செயலரின் இந்த கொழும்புப் பயணம் முக்கியத்துவமானதென பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.