உலகம்

இந்திய தேர்தல் முறையில்  புரட்சி  செய்த சேஷன்இந்திய தேர்தல் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் என கருதப்படும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளரும், ‘மகசேசே’ விருது பெற்றவருமான டி.என்.சேஷனின் இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் இடம்பெற்றது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரpன் உடலுக்கு அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என இலட்சக்கணக்கானோர் நேற்றைய தினம் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த டி.என்.சேஷன் தனது 87ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

கோவை,திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி மாவட்ட ஆட்சியாளராகவும், மதுரை மாவட்ட ஆட்சியாளராகவும், போக்குவரத்து துறை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார;.

பல்வேறு பொறுப்புகளை வகித்த சேஷன் தன்னுடைய பணியின்போது அரசு விதிகளை நடைமுறைப்பபடுத்தும் விடயத்தில்  அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடம் இறுக்கமாக நடந்து கொண்ட முறைய அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

அவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட பின்னர்தான் அதற்கு இருந்த அதிகாரம் குறித்து அனைவருக்கும் தெரியவந்தது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தேர்தலை மிக நேர்மையாக அவர் நடத்திக் காட்டியதையடுத்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைக் கண்டு அரசியல்வாதிகள் அஞ்சியதும் குறிப்பிடத்தக்கது.