விளையாட்டு

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தேர்தல் ஒக்டோபர் 22ல்

 

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் திகதி உறுதியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய யாப்பின் கீழ் இந்த தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகத்துக்காக நியமிக்கப்பட்ட லோதா குழுவின் மறுசீரமைப்பு பரிந்துரைகளை பெரும்பான்மையான இந்திய கிரிக்கட் மாநில அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இந்த தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கிரிக்கட் சபைகளின் தேர்தல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.