விளையாட்டு

இந்திய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராகிறார் மஹேல?

 

உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் தோல்வியை அடுத்து, இந்திய அணியிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை தெரிவு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருடன் ரவி சாஷ்த்திரியின் பதவி காலம் முடிகிறது.

அவருக்கு பதிலாக புதிய பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் விரைவில் கோரப்படவுள்ள நிலையில், அதற்கு இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவும் விண்ணப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருடன், கெரி கிறிஸ்ட்டன், தொம் மூடி, ட்ரெவல் பெய்லிஸ், மிக்கி ஆர்த்தர் ஆகியோரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.