உலகம்

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரன்பீர் சிங்

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரன்பீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையின் தளபதியாக தற்போது பொறுப்பு வகிக்கும் சுனில் லம்பா மே-31-ம் தேதியில் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய தளபதியாக துணை தளபதி கரன்பீர் சிங்கை இந்திய மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்திய கடற்படையில் 37 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் கரன்பீர், விஷிஸ்ட் சேவா பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.