விளையாட்டு

இந்திய அணி இலகு வெற்றிஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியpல் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து  142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா மாத்திரமே குறிப்பிடத்தக்க 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்திய அணியின் பந்துவீச்சில் ஷர்துல் தாகுர் மூன்று விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

143 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், கே.எல்.ராகுல் 45 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

4 ஓவர்களை வீசி 18 ஓட்டங்களைக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நவ்தீப் ஷைனி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.