விளையாட்டு

இந்திய அணியுடன் ஆட்ட நிர்ணயம்; இருவர் மீது வழக்கு


இந்திய மகளிர்  தேசிய  கிரிக்கெட் அணியுடன் ஆட்ட நிர்ணயத்தில், ஈடுபட முயன்ற இருவருக்கு எதிராக, இந்திய பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகேஷ் பப்னா மற்றும் ஜிதேந்திர கோத்தாரி ஆகிய இருவருக்கு எதிராகவே இந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு பந்தய மையமாக கருதப்படும், இந்தியாவில், பந்தயத்தின்போது பரிமாற்றப்படும் பணமானது, சுமார் 45 பில்லியன்  டொலர்கள் முதல் 150 பில்லியன் டொலர்கள் வரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு  சந்தேகநபர்களும், விளையாட்டு முகாமையாளர்களைப்போல் நடித்து,பெண் கிரிக்கெட்
வீராங்கனைகளை  அணுகியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்திய பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.