விளையாட்டு

இந்திய அணித்தேர்வு ஞாயிற்றுக்கிழமை

 

உலகக்கிண்ணத் தொடரில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கெட் அணி, சர்வதேச போட்டிகளை மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆரம்பிக்கிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கு இந்திய அணியின் தேர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

இதற்காக கூடும் தேர்வு குழுவானது கரிசனைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்த உள்ளது.

குறிப்பாக தோனியின் எதிர்காலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

அத்துடன் இந்திய அணியின் மத்திய துடுப்பாட்ட வரிசை குறித்தும் முக்கியமாக கவனம் செலுத்தும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.