விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

 

உலகக்கிண்ணத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற போட்டிகளில் ஒன்றான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

மென்செஸ்ட்டர் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சிக்கார் தவான் விளையாடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், அவருக்கு பதிலாக விஜய் சங்கர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

ரோஹித் ஷர்மாவுடன் லோகேஸ் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்படவுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சமநிலை தொடர்பில் குழப்பங்கள் நீடிக்கின்றன.

ஹரிஸ் சொஹைல் இன்று இணைக்கப்படலாம்.

அவருக்கு பதிலாக சொஹைப் மாலிக் அல்லது ஆசிப் அலி அணியில் இருந்து நீக்கப்படலாம்.

இதேவேளை போட்டியின் போது மழைக்குறுக்கீடு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.