Breaking News

இந்தியா -பலாலி விமான சேவை ஒக்டொபர் 15 முதல் !

 

ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து பலாலிக்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.செப்ரெம்பர் இறுதி முதல் ஒத்திகை பார்க்கப்படுமென தெரிகிறது .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுனா ரனதுங்க மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றி இன்று ( கலந்துரையாடினர்.வடக்கில் இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கூட்டமைப்பினருக்கு பிரதமர் விளக்கினார்.

விமான சேவையை தொடங்குவது தொடர்பான 30 வீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜுனா ரனதுங்க இங்கு தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் நீர் வழங்குவதற்கான பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேசிய நீர் வழங்கல் சபை அமைந்திருப்பதால் கடற்படையின் உதவியுடன் கடல் நீரை சுத்திகரிப்பதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று இங்கு பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.

எதிர்காலத்தில் இதனை ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ .2.2 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.