விளையாட்டு

இந்தியா – பங்களாதேஸ் இன்று மோதல்

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன.

இன்று இந்திய மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியா தமது அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், பங்களாதேஸ் இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலையுடன் களமிறங்குகிறது.

இன்றைய போட்டிக்கான பங்களாதேஸ் அணியில் காயம் காரணமாக மஹமதுல்லா விளையாட மாட்டார் என்று முன்னர் கூறப்பட்ட போதும், அவர் குணமடைந்து, அணிக்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் கடந்த போட்டியில் குறிப்பிடத்தக்க அளவில் சோபிக்காத நிலையில், இன்றையதினம் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.