விளையாட்டு

இந்தியா – நியுசிலாந்து மோதல்

 

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 16வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

போட்டியில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சிக்கார் தவான் காயமடைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிசாப் பான்ட் பெயரிடப்பட்டுள்ள போதும், இன்று விஜய் சங்கர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் சிக்கார் தவானுக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவுடன் லோகேஸ் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

இன்றைய போட்டி நடைபெறும் நொட்டிங்ஹேம் மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமானது என்று கூறப்படுகிறது.

அதேநேரம் இன்றும் அங்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.