விளையாட்டு

இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 28 ஆவது லீக் போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி சவுதம்ப்டனில் நடைபெறுகிறது.
கடந்த நாட்களில் சவுதம்ப்டனில் நடந்த போட்டிகள் பெரும்பாலும் மழையினால் பாதிக்கப்பட்டிருந்தன.
எனினும் இன்று அங்கு வெயிலுடனான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் காயமடைந்துள்ள புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக முகமது சமி சேர்க்கப்படவுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தொடர் தோல்விகளுக்கு பிறகு அணியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது.
இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளமும் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.