விளையாட்டு

இந்தியாவை வீழ்த்த வியூகம் அமைக்கும் லோக்கி பேர்கசன்

 

உலகக்கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியுடன் நாளையதினம் நியுசிலாந்து மோதவுள்ளது.

இந்தபோட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தம்மிடம் சிறந்த வியூகம் இருப்பதாக, நியுசிலாந்தின் பந்துவீச்சாளர் லோக்கி ஃபேர்கசன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை வீழ்த்துவதற்கு அவர்களது விக்கட்டுகளை வேகமாக கைப்பற்றுவதே வழி.

ஆனால் இதற்கு அதிக விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டி இருக்கும்.

அதிகபடியான ஓட்டமில்லா பந்துகளை வீசி அவர்களின் பொறுமையை சோதிப்பதன் மூலம் அதிக அழுத்தம் கொடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.