விளையாட்டு

இந்தியாவில் உலகக் கிண்ண ஹொக்கி2023ஆம் ஆண்டு  ஆண்கள் உலகக் கிண்ண ஹொக்கி தொடர் இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் நேற்று நடைபெற்ற, சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் நிர்வாக்குழு கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 2023ஆம் ஆண்டு  ஜனவரி 13 – 29 வரை ஆண்கள் உலகக் கிண்ண ஹொக்கி தொடர் இந்தியாவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடரை 2022ஆம் ஆண்டு ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. இந்தத் தொடர் ஜூலை 1 – 22 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கிண்;ணத் தொடரின் போட்டிகள் நடைபெறும் நகரங்களை தொடரை நடத்தும் நாடுகள் பின்னர் அறிவிக்கும் எனவும் சர்வதேச ஹொக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.