உலகம்

இந்தியாவில் அதிக வரி விதிப்பு – சாடுகிறார் ட்ரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சன கருத்து வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ,

“இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.. அவர்கள் (அமெரிக்க பொருட்களுக்கு) உலகிலேயே அதிகம் வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அவர்கள் நமக்கு 100 சதவீத வரி விதித்தார்கள். அவர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களுக்கு நாம் வரி விதிப்பதில்லை. நாம் நமது ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அவர்கள் 100 சதவீத வரி விதிக்கிறார்கள். இது சரியல்ல”
எனக் கூறினார்.