விளையாட்டு

இந்தியாவிற்கு எதிராக விளையாட தயாராகும் அம்லா

தென்னாபிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தபோட்டியில் ஹசீம் அம்லா விளையாடுவதற்கான உடற்தகுதியைப் பெற்றிருப்பார் என்று தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் மருத்துவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஹசீம் அம்லா தலையில் பந்தினால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
இதனால் அவர் பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டதுடன், இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது.
இந்தநிலையில் இந்தியாவுடனான போட்டி முக்கியமானது என்பதால், அதில் அம்லா இணைக்கப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது.