விளையாட்டு

இந்தியாவின் வெற்றிகள் தொடர்கின்றன – சமி ஹெட்றிக் சாதனை.

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இருந்தது.

விராட் கோலி 67 ஓட்டங்களையும் கேதர் ஜாதவ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 213 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை அடைந்தது.

மொஹமட் சமி இறுதி ஓவரில் ஆப்கானிஸ்தானின் இறுதி 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி ஹெட்றிக் சாதனை படைத்தார்.

அவர் மொத்தமாக 4 விக்கட்டுகளை இன்று வீழ்த்தினார்.