Breaking News

இந்தியாவின் புலனாய்வு தகவல்களையடுத்து மே தினக் கூட்டங்கள் ரத்து !

 

பிரதான அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தாக்குதல் சம்பவங்கள் தொடரலாமென இந்திய தேசிய உளவுத்துறை இலங்கை பாதுகாப்பு தரப்பினை சில தினங்களுக்கு முன்னர் எச்சரித்ததாகவும் அந்த எச்சரிக்கை அரசியல் தலைவர்கள் பலருக்கு வழங்கப்பட்டதையடுத்து இவ்வாறு மே தினக் கூட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் மீது அனர்த்தங்கள் விளைவிக்கப்படலாமென சந்தேகம் கொள்ளும் பாதுகாப்பு தரப்பு மக்களையும் அந்த கூட்டங்களுக்கு வரும் அரசியல் பிரமுகர்களையும் ஒரே நேரத்தில் பாதுகாப்பதென்பது சிரமமான விடயம் என்பதால் கூட்டங்களை ரத்துச் செய்யுமாறு அரசியல் கட்சிகளிடம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.