உலகம்

இந்தியாவால் ஆபத்து – நாசா கவலை

இந்தியாவால் ஆபத்து – நாசா கவலை

செயற்கைக்கோளை அழித்த இந்தியாவின் நடவடிக்கையினால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக நாசா கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசா தெரிவித்திருப்பதாவது ,

ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் இந்தியாவால் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறியுள்ளது.இதன் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், எதிரிநாட்டு செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை கடந்த 27-ம் தேதி இந்தியா நடத்தியது. இந்த திட்டத்துக்கு மிஷன் சக்தி திட்டம் என பெயரிடப்பட்டு இருந்தது