விளையாட்டு

இத்தாலி ஓபனில் நடால் சாம்பியன்

ரோமில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபாயல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகின் முதலாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நவோக் ஜொக்கேவிக்கை எதிர்த்து அவர் நேற்று இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மோதினார்.
இதில் 6-0 4-6 6-1 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டு நடால் பெறும் முதலாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.