உலகம்

இத்தாலி சோதனையில் அதிநவீன ஆயுதங்கள் மீட்பு

இத்தாலியில் தீவிர வலதுசாரி தீவிரவாத குழுக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தேடுதல்களின் போது வடக்கு இத்தாலியில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசார் வான்வழி ஏவுகணை மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

அவர்களில் இருவர் ஃபோர்லி விமான நிலையத்திற்கு அருகில் கைதாகினர்.

நியோ-நாசி பிரச்சார பொருட்களும் பல நகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத சக்திகளுக்கு இத்தாலிய தீவிர வலதுசாரி சக்திகள் உதவி வழங்குவது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடந்ததாக இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன.