விளையாட்டு

இடைவிலகினார் பெட்ரா விடோவா

ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து, செக் குடியரசின் பெட்ரா விடோவா இடைவிலகுவதாக அறிவித்துள்ளார்.
தொடரின் முதல்சுற்றுப் போட்டியில் அவரது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தரநிலையில் ஆறாம் இடத்தில் உள்ள பெட்ரா, 2 தடவைகள் விம்பில்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
அவர் இன்று 84ம் தரநிலையில் உள்ள சொரானா சேர்ஸ்டியாவை எதிர்த்து விளையாடவிருந்தார்.
ஏற்கனவே பெட்ரா இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்தும் இடைவிலகியமை குறிப்பிடத்தக்கது.