இடைக்கால(காபந்து) அரசாங்கம் ஒன்று நாளையதினம் முதல்…
இடைக்கால(காபந்து) அரசாங்கம் ஒன்று நாளையதினம் முதல் ஆட்சி ஏற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவி விலக உள்ளார். அதனைத் தொடர்ந்து 15 பேரைக் கொண்ட சிறிய அமைச்சரவை ஒன்று பதவியேற்று, தேர்தல் நடைபெறும் வரையில் செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியின் பின்னரே நாடாளுமன்றை கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.