விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

349 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்து.

இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் 107 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 103 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.