விளையாட்டு

இங்கிலாந்து இரசிகர்களுக்கு தடை விதித்த இலங்கை

 

இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் நாட்டிற்கு வருகைத் தர திட்டமிட்டிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் நாட்டை வந்தடையக்கூடும் என்ற காரணத்திற்காக, இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை நீடித்துள்ளது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியுள்ளபோதிலும், பல கிரிக்கெட் இரசிகர்கள் விடுமுறை நாட்களை கழிக்க இலங்கையை நாடுவதாக, இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எனினும், ஐக்கிய இராச்சியம் ஊடாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக இலங்கை அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும் சில இங்கிலாந்து கிரிக்கெட் இரசிகர்கள் ஏற்கனவே இலங்கையில் தங்கியுள்ளனர்.

காலியில் முதலாவது டெஸ்ட் வியாழக்கிழமை ஆரம்பமாகவிருந்த நிலையில், அதற்கமையவே அவர்கள் வீசாக்களை பெற்றுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.