விளையாட்டு

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய முக்கிய போட்டி இன்று

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முக்கிமான போட்டியான இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

அரையிறுதி சுற்றுக்கு அவுஸ்திரேலியா தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள நிலையில், இங்கிலாந்தை இன்று எதிர்க்கிறது.

இங்கிலாந்து இலங்கையுடனான தோல்வியை அடுத்து, அரையிறுதிக்கு தகுதி பெறுவதில் சவாலை எதிர்நோக்கியுள்ளது.

எனவே இந்த போட்டி இங்கிலாந்துக்கு மிக முக்கியமாக அமையவுள்ளது.