விளையாட்டு

இங்கிலாந்துடன் இந்தியா பலப்பரீட்சை

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்றையதினம் இந்திய அணி உலகக்கிண்ண லீக் போட்டியில் மோதுகிறது.

இந்த போட்டிக்கான இரண்டு அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இங்கிலாந்தில் ஜேசன் ரோய் குணமடையும் பட்சத்தில், ஜேம்ஸ் வின்ஸ் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் இன்றைய போட்டியில் இந்திய அணி சர்ச்சைக்குரிய ஆரஞ்ச் நிறத்திலான ஆடையுடன் விளையாடவுள்ளது.

இந்த ஆடையை அணிந்தே பயிற்சியும் ஈடுபட்டுள்ளது.

புள்ளிபட்டியலில் முன்னிலையில் உள்ள இந்திய அணி ஏற்கனவே தமது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

எனினும் இங்கிலாந்து அணி தமது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்த போட்டி அதற்கு மிகமுக்கியமானதாக மாறியுள்ளது.