விளையாட்டு

இங்கிலாந்துடன் அரையிறுதியில் மோதும் அவுஸ்திரேலியா

ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த நேற்றைய போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களில் 315 ஒட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இதன்விளைவாக புள்ளி பட்டியலில் 2ம் இடத்திலுள்ள அவுஸ்திரேலியா, வியாழக்கிழமை நடைபெறும் உலகக் கிண்ண அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோத நேர்ந்துள்ளது.
இந்தியா செவ்வாயன்று ஓல்ட் டிராஃபோர்டில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.