விளையாட்டு

இங்கிலாந்தின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவி விலகுகிறார்.

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மார்க் ராம்பிரகாஸ் இந்த மாத இறுதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
2014ம் ஆண்டு நொவம்பர் மாதம் அவர் இங்கிலாந்து அணிக்கான துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அவரது ஒப்பந்தம் செப்டம்பர் மாதம் வரையில் இருக்கின்ற போதும், இந்த மாதத்துடன் ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.
1991ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரையில் மார்க் ராம்பிரகாஸ், இங்கிலாந்து அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.