இலங்கை

” இக்கட்டான தருணத்தில் அரசுடன் இருப்போம் ” – ரணிலிடம் சொன்ன மஹிந்த – 90 பேர் பாதுகாப்பு தரப்பின் வலையில் இருந்ததாக ரணில் தகவல் !

தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணிலை வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இக்கட்டான இந்த தருணத்தில் அரசியல் பேதங்களை மறந்து அரசுக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் எதிர்க்கட்சி வழங்குமென தெரிவித்துள்ளார்.

இன்று மாலை அலரி மாளிகையில் பிரதமர் ரணிலை சந்தித்து பேச்சு நடத்திய மஹிந்த ,அரசு இதைவிட தேசிய பாதுகாப்பில் கவனமாக இருந்திருக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் குறித்து வெளிவந்த செய்திகளை அரசு ஏன் கவனத்திற்கொள்ளவில்லையென்றும் மஹிந்த , பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.

ஆனால் இது தொடர்பில் பதிலளித்துள்ள பிரதமர் ரணில் ஏற்கனவே சுமார் 90 பேர் வரை பொலிஸாரின் தொடர் கண்காணிப்பில் இருந்ததாகவும், முக்கியமான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் முன்னெச்சரிக்கையை கவனிக்காத தரப்பு குறித்து விசாரிக்கப்படுமென்றும் இங்கு பிரதமர் கருத்து வெளியிட்டார்.