உலகம்

ஆஸ்திரேலிய துப்பாக்கி சூட்டில் பலர் காயம்

 

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் – பிரஹ்ரான் மாவட்டத்தில் உள்ள லிட்டில் செப்பல் வீதி மற்றும் மால்வெர்ன் வீதிகளுக்கிடையே ஹொட்டேல் ஒன்றில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் திடீரென இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 3 அல்லது 4 பேர் காயம் அடைந்திருக்க கூடும் என தெரிகின்றது.எனினும் விக்டோரியா பொலிஸார் விரிவான விவரங்களை வெளியிடவில்லை. இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவரவில்லை.

ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக அரிது. கடந்த 1996ம் ஆண்டு தாஸ்மானியாவில் 35 பேர் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்பின் கடந்த வருடம் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டார்.