உலகம்

ஆஸியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் லிபரல் கூட்டணி

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கூட்டணி கட்சியே வெற்றிப்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரியவந்துள்ளது.

எதிர்கட்சியான தொழில்கட்சியின் தலைவர் பில் சோர்டன் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.

தாம் பிரதமர் ஸ்கொட் மொரிசனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் தாம் இனி தொழில்கட்சியின் தலைவர் பதவிக்காக தாம் இனி போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பெரும்பாலான வாக்குகள் எண்ணி நிறைவு செய்யப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் முன்கூட்டிய கருத்துக் கணிப்புகளில் தொழில்கட்சியே வெற்றிப் பெற்றதாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.