Breaking News

ஆளுங்கட்சி கூட்டணித் தலைவர்களுடன் மஹிந்த நாளை முக்கிய பேச்சு – அமைச்சரவையும் கூடுகிறது !

 

ஆளும் அரசின் பங்களிக் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை முக்கியமான கூட்டமொன்றை நடத்தவுள்ளார்.

அதற்கு முன்னதாக ஆளுங்கட்சியின் முன்னாள் எம் பிக்கள் அனைவருடனும் பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்.

நாளை காலை அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் இந்த கூட்டங்கள் நடக்கவுள்ளன .

வெளிமாவட்டங்களில் சிக்கி சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளவர்கள் வீடு திரும்ப ஏற்பாடுகளை செய்வது குறித்து அமைச்சரவையில் பேசப்படவுள்ளது.

அதேவேளை கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் – முன்னாள் எம் பிக்களுடனான சந்திப்பில் மக்களுக்கான நிவாரண முன்னெடுப்பு , தேர்தலை பிற்போடுவது குறித்து ஆராயப்படவுள்ளன.