உலகம்

ஆறு அதிகாரிகளை பதவி நீக்கினார் தாய்லாந்து மன்னர்தாய்லாந்து மன்னர் வஜ்ரலோங்கோர்ன் தொடர்ந்து அரச அதிகாரிகள் மீதான அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றார்.

மன்னருக்கு எதிராகவும்இ விசுவாசமின்றியும் செயற்பட்டதாக கூறிஇ தனக்கு ஒருகாலத்தில் துணைவியாக இருந்த பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னா பாக்கpன் அரச அதிகாரத்தை கடந்தவாரம் வஜ்ரலோங்கோர்ன் பறித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மன்னருக்கும் நாட்டுக்கும் எதிராக மிகவும் மோசமான நடந்து கொண்டதாக ஆறு அதிகாரிகளை அவர் அதிரடியாக நீக்கியுள்ளார்.

சுயலாபங்களை இலக்காக கொண்டு தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி கொண்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மூத்த பொலிஸ் அதிகாரியும் அரண்மனை மெய்காப்பாளர்கள் இருவரும் இந்த ஆறு பேரில் அடங்குகின்றனர்.

தனது தந்தையை போல் அல்லாமல் மன்னர் வஜ்ரலாங்கோர்ன் தனது அதிகாரத்தை நேரடியாக பிரயோகம் செய்வதhக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.