இலங்கை

ஆறுமுகம் தொண்டமானுக்கு கண்கள் சிவந்திருப்பது ஏன் ? – புது விளக்கம் கொடுத்தார் சிவலிங்கம் எம்.பி

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவருக்கு கண்கள் ஏன் வேறு நிறத்தில் இருக்கிறது என்பதற்கு இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுத்தார் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம்..

வரவு செலவுத் திட்ட இறுதி நாளான இன்று விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது,

மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எல்லா வேலைகளையும் செய்தது.அமரர் தொண்டமான் முதல் ஆறுமுகம் தொண்டமான் வரை எல்லா வேலைகளையும் செய்தது நாங்கள் தான்.மக்கள் அதனை அறிவார்கள். இங்கு சபையில் பேசிய ஒருவர் ஆறுமுகம் தொண்டமானின் கண்கள் நீலமாகவோ சிவப்பாகவோ இருப்பதாக கூறினார்.நாட்டின் வெப்பநிலை எப்படி இருக்கிறதென்பதை அவர்கள் யோசிக்க வேண்டும்,நாடே காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது . சபையில் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது ‘.

என்றார் முத்து சிவலிங்கம் எம் பி