Breaking News

ஆறுமுகத்திற்கு பதிலாக நுவரெலியாவில் களமிறங்குகிறார் ஜீவன் !

 

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவையடுத்து ,பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடவிருந்த நுவரெலியா மாவட்டத்தில் அவருக்குப் பதிலாக களமிறங்குகிறார் அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான்.

இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ தொ கா தூதுக்குழு கட்சியின் இந்த முடிவை தெரிவித்தது.தேர்தலில் போட்டியிடும் ஒருவர் உயிரிழந்தால் அவரின் இடத்திற்கு மூன்று நாட்களுக்குள் ஒருவரை நியமிக்க வேண்டும் .ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் இ தொ கா போட்டியிடுவதால் முறைப்படி பெரமுனவின் செயலர் இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பார்.

ஜீவன் தொண்டமானை நுவரெலியாவில் களமிறக்கவுள்ள இ தொ கா ,கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து பின்னர் ஆராயுமென சொல்லப்பட்டது.