விளையாட்டு

ஆறுதல் வெற்றிக்கான போட்டி இன்று

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்த இரண்டு அணிகள் இன்றைய லீக் போட்டியில் விளையாடுகின்றன.
லீட்ஸில் நடைபெறும் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளும், ஆப்கானிஸ்தானும் மோதவுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் 2019ம் ஆண்டு உலக்கக்கிண்ண தொடரின் இறுதி லீக் போட்டி இதுவாகும்.
அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இன்றைய போட்டி ஆறுதல் வெற்றிக்கான போட்டியாக அமையும்.