விளையாட்டு

ஆறாவது முறையாகவும் உலக கிண்ணத்தை வெல்வோம் – அவுஸ்திரேலியா நம்பிக்கை

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கு முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி தமது வியூகங்களை மாற்றிக் கொள்ளாமல் அதன்படியே விளையாடும் என்று, அதன் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து போன்றோ, இந்தியா போன்றோ, நியுசிலாந்து போன்றோ விளையாட வேண்டிய அவசியம் அவுஸ்திரேலியாவிற்கு இல்லை.

அவுஸ்திரேலியாவிற்கு தனி வழியுள்ளது.

இறுதியாக இடம்பெற்ற ஐந்து உலகக் கிண்ணத் தொடர்களில் நான்கில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது.

அந்த நம்பிக்கையுடன் அவுஸ்திரேலியா இந்தமுறையும் உலகக்கிண்ண தொடருக்கு முகம் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.