உலகம்

ஆர்னல்ட் ஸ்வாஸ்நேகர் மீது தென்னாப்பிரிக்காவில் தாக்குதல்

உலக புகழ்பெற்ற ஹொலிவுட் திரைப்பட நடிகர் ஆர்னல்ட் ஸ்வாஸ்நேகர், தென்னாப்பிரிக்காவில் தாக்கப்பட்டுள்ளார்.

கலிஃபோர்னியாவின் ஆளுனராக இருந்த 71 வயதான ஆர்னல்ட், தென்னாப்பிரிக்காவில் விளையாட்டு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.

தாக்கியவர் கைது செய்யப்பட்டு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தாம் தாக்கப்பட்டதை முன்னதாக அறியவில்லை என்றும், காணொளிகளை பார்த்தப் பின்னரே தாக்கப்பட்டதை அறிந்துக் கெண்டதாகவும் ஆர்னல்ட் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.