உலகம்

ஆர்ஜன்டீனாவின் புதிய ஜனாதிபதியாக அல்பர்டோ பெர்னாண்டஸ் தெரிவு

ஆர்ஜன்டீன ஜனாதிபதித் தேர்தலில், பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி, களமிறங்கிய, அல்பர்டோ பெர்னாண்டஸ் வெற்றிபெற்றுள்ளார்.

பெர்னாண்டஸ் வெற்றி பெறத் தேவையான 45% வாக்குகளைப் பெற்று, பழமைவாத மொரிசியோ மெக்ரியை தோல்வியடையச் செய்துள்ளார்.

ஆர்ஜன்டீன மக்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள், வறுமையில்  சிக்கி பொருளாதார நெருக்கடினை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

தனது அரசியல் போட்டியாளரை வாழ்த்திய மெக்ரி, ஒழுங்கான மாற்றம் குறித்து விவாதிக்க, பெர்னாண்டஸை இன்றைய தினம், ஜனாதிபதி மாளிகைக்கு   அழைத்துள்ளார்.

90% க்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்% பெர்னாண்டஸ் 47.79% வாக்குகளைப் பெற்றுள்ளார். மெக்ரி 40.71% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் வெற்றிபெற ஒரு வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 45% வாக்குகள் அல்லது 40% மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த போட்டியாளரை விட 10 புள்ளிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.