உலகம்

ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதி அரச படைகள் வசம்சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த முக்கிய பகுதி ரஷ்ய துருப்புக்களின் உதவியுடன் சிரிய இராணுவத்தால்  கைப்பற்றப்பட்டுள்ளது.

அலெப்போ மற்றும் டமஸ்கஸை இணைக்கும் மாரெத் அல் நுமன் பகுதியை கைப்பற்ற இடம்பெற்ற மோதல்களுக்கு அஞ்சி ஏராளமாக மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இலட்சக்கணக்கான பொதுமக்கள் (பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்) மோதலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் துருக்கியின் எல்லையை நோக்கி நகர்ந்துள்ளனர்.

முகாம்களிலும் தற்காலிக தங்குமிடங்களிலும் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரிய அரசங்கத்தின் தலைவர் ஆசாத்துக்கும், கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றறுவரும் மேதல்கள்  இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.