உலகம்

ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியேற்றவாசிகளை அப்புறப்படுத்தியது பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர், பரிஸ் மற்றும் புறநகரப்பகுதிகளில் சட்டவிரோத முகாம்களை அமைத்து தங்கியிருந்த 1600ற்கும், மேற்பட்ட குடியேற்றவாசிகள் பொலிஸாரினால், அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்சில் குடியேறிகள் மற்றும் அகதி தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது அரசாங்கம் இறுக்கமாக கட்டுப்பாடுகளை  அறிவித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரிஸ் போர்ட் டி லா  செப்பல் பகுதியில் சட்டவிரோத முகாம்களை அமைத்து தங்கியிருந்த  அனைவரையும்  அதிகாலை சுற்றிவளைத்த  600ற்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் அதிகாரிகள், அவர்களை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

ஆப்கானியர்கள்சோமாலியர்கள் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து பரிஸில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தஞ்சக்கோரிக்கையாளர்கள், வேறுவொரு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.