இலங்கை

ஆமர் வீதியில் வீடொன்று முற்றுகை – முக்கியமான ஆவணங்கள் மீட்பு !

கொழும்பு 12 மெஸேன்ஜர் வீதி , பீனிக்ஸ் தொடர்மாடியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் – அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் முக்கியஸ்தர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய கணனி மற்றும் பல அடிப்படைவாத கருத்துக்களை பதிவாகக் கொண்ட சி டிக்கள் , 12 தொலைபேசிகள் , கடவுச் சீட்டுக்கள் என்பன இந்த வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் கொழும்பு மத்திய நிலையமாக செயற்பட்ட இந்த வீட்டின் உரிமையாளரான புடவைக்கடை வர்த்தகர் விசாரணைக்காக தேடப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.