விளையாட்டு

ஆப்கான் – பங்களாதேஸ் இன்று மோதல்

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 31வது போட்டி லீக் இன்று நடைபெறுகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.
ஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டநிலையில் இன்றைய போட்டியில் முகம் கொடுக்கிறது.
பங்களாதேஸை பொறுத்தவரைக்கும், இன்னும் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது.
எனினும் அணியில் பல வீரர்கள் காயமடைந்துள்ளமை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.