உலகம்

ஆப்கான் குண்டுவெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு

 

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காபூலில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜமால் மினா எனுமிடத்தின் அருகே காலை 9:30 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதையடுத்து கார்த்-இ-சாகி எனுமிடத்தில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.