விளையாட்டு

ஆப்கானை அதிரடியாக சுருட்டியது இலங்கை

 

ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண தொடர் போட்டியில், இலங்கை அணி 34 ஓட்டங்களால் டக்வர்த் லூவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 36.5 ஓவர்களில் 201 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது .

மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் தேவை என்ற இலக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து 34 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியது.

ஆப்கன் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே பெற்றது .