விளையாட்டு

ஆப்கானிஸ்தானை 7 விக்கட்டுக்களால் வென்றது ஆஸ்திரேலியா !

ஆப்கானிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் 38.2 ஓவர்களில் 207 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா 34.5 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

89 ஓட்டங்களைப்பெற்ற டேவிட் வோர்னர் ஆட்ட நாயகனாக தெரிவானார்.